நீலகிரியில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கு ஜூன் முதல் வாரம் வரை மாவட்ட தோட்டக்கலைத் துறை தடை விதித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா , குன்னூர் சிம்ஸ் பூங்கா உட்பட அணைத்து தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங்காக்களில் திரைப்பட சூட்டிங் எடுக்க ஜூன் முதல் வாரம் வரை தடை விதித்துள்ளது. இதனை மாவட்ட தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. கோடை சீசனில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயனிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post