வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாளை மாலை 6 மணி முதல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் தடை வித்துள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள களத்தில் உள்ளனர். இந்நிலையில், நாளை மாலை 6 மணி முதல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த விதிமுறை, வாக்குப் பதிவு முடியும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப்பணியார்கள், நாளை மாலை 4 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post