கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட் பகுதியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் தனியார் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு வெளியேற்றப்படும் கழிவுகளை அந்நிறுவனத்தினர், பொதுமக்கள் செல்லும் சாலையில் லாரிகள் மூலம் கொட்டி சென்று விடுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Discussion about this post