பள்ளி மாற்றுச்சான்றிதழை போலியாக தயாரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, அரசு நிதி உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவன் விக்னேஷ் என்ற மாணவன், மாற்று சான்று வாங்க முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு, போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக மாணவனின் பெற்றோரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது.
இந்த மாற்று சான்றிதழ் தங்கள் பள்ளி சான்றிதழ்தான் என்றும், தலைமையாசிரியரின் கையொப்பம்தான் என்றும் பள்ளி நிர்வாகம் உறுதி கூறியுள்ளது. ஆனாலும், இந்த மாற்று சான்றிதழை வெளியில் விற்பனை செய்தது யார் என்பது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post