தனியார் வங்கிக்கு பல கோடி ரூபாய் பணம் எடுத்துச் சென்ற வாகனம் விபத்துகுள்ளாகி சாலையில் நின்றதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் வங்கிக்கு, கும்பகோணம் உத்தண்டியிலிருந்து பணம் எடுத்து கொண்டு தனியார் நிறுவன வாகனம் சென்று கொண்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில், முன்னே சென்ற கார் மீது மோதி வங்கியின் பணம் எடுத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. பல கோடி ரூபாய் பணத்துடன், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நின்று கொண்டிருந்த வாகனத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவன வாகனம் அதிவேகமாக வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post