ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜி-20 என்று அழைக்கப்படும் அமைப்பு சார்பில் ஓவ்வொரு வருடமும் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா,மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற உள்ள இந்த ஆண்டிற்கான உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்ற பிரதமர், மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் ஜூன் 27-ம் தேதி முதல் 29ம் தேதி வரை பிரதமர் மோடி பங்கேற்கிறார். சீன அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டமுக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.