பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில், ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக, தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது” என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி அனுப்பியதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். மேலும், மோடியின் வாழ்த்துச்செய்தியை வரவேற்பதாகவும், இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரிவான ஆலோசனை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.