உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆயிரத்து 571 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 2 தேசிய நெடுஞ்சாலைகளை திறந்து வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாபத்பூர்- வாரணாசி இடையே ஆயிரத்து 571 கோடி ரூபாய் செலவில் 2 நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலை, பாபத்பூர், ஜான்பூர், சுல்தான்பூர், லக்னோ, வாரணாசி விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கின்றன. இதனால், போக்குவரத்து எளிதாக்கப்பட்டு பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதேபோன்று, உலக வங்கியின் 50 சதவிகித பங்களிப்புடன் அமைக்கப்படும் நீர்வழிப் போக்குவரத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
Discussion about this post