பாஜக கட்சியின் உண்மையான சாரம்சத்தை அத்வானி பேசியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்
பாஜக மூத்த தலைவராக இருக்கும் எல்.கே. அத்வானி குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் போட்டியிட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது, காந்தி நகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில், தனது நிலைப்பாட்டை அத்வானி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். அதில், ஜனநாயகத்தை பாதுகாப்பது மற்றும் ஜனநாயக பாரம்பரியங்கள் உள்ளிட்டவை கட்சியிலும் இருக்கிறது என்றும் மத்திய அரசு ஆட்சி செய்யும் இந்தியாவிலும் இருக்கிறது என்பதால் பாஜகவை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று கூறியிருந்தார். மேலும், இந்திய தேசிய என்ற அளவில் நாட்டுக்கு எதிரானவர்கள் எவரையும் நாங்கள் ஆதரிப்பது கிடையாது என்று தெரிவித்திருந்தார். இதனை பாராட்டும் விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் சாரம்சத்தை அத்வானி மிக தெளிவாக கூறியுள்ளார் என்றும் அவரை போன்ற தலைவர்களை எண்ணி பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post