விவசாயிகள் போராட்டம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 70வது நாளை எட்டியுள்ளது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையை போல மீண்டும் ஒர் வன்முறை சம்பவம் நடக்காத வகையில், டெல்லி எல்லைகளில் ஆறு கட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஹாலிவுட் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Discussion about this post