வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்ற உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர் தனது சுதந்திர தின உரையில் சேர்க்க வேண்டிய கருத்துகள் குறித்து மக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். மக்கள் தெரிவிக்கும் சில கருத்துகள் அவரது உரையில் இடம்பெறும். அதேபோல் இந்த ஆண்டும் சுதந்திர தின உரைக்காக மக்களிடம் அவர் கருத்து கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், வரும் 15ஆம் தேதி சுதந்திர தின உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் என்ன பேச வேண்டும் என்பது குறித்த யோசனைகளை மக்களிடம் இருந்து பெற விரும்புவதாகவும், தனக்கு யோசனைகள் அளிப்பீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் மோடி கூறியுள்ளார். ‘நமோ ஆப்’ மூலமும், பொதுமக்கள் தங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியான சில வினாடிகளில், ஏராளமானோர், பிரதமர் மோடிக்கு, டுவிட்டரில் பல்வேறு ஆலோசனைகளை அளித்து வருகின்றனர்.
பொதுமக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்
-
By Web Team
- Categories: இந்தியா
- Tags: நரேந்திர மோடிபிரதமர்
Related Content
சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!
By
Web Team
May 24, 2021
கொரோனா தடுப்பூசி வதந்திகளை நம்பாதீர்கள் - பிரதமர் மோடி
By
Web Team
April 25, 2021
குடியரசுத் தலைவர், பிரதமருக்கான பிரத்யேக விமானம் - 13 ஆயிரம் கி.மீ இடைநிறுத்தமின்றி டெல்லி வந்தது!
By
Web Team
October 1, 2020
இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
By
Web Team
September 26, 2020
4 சுவர்களுக்குள் கல்வியறிவு இருந்துவிடக் கூடாது- பிரதமர் மோடி
By
Web Team
September 11, 2020