'statue of unity' சிலையை பற்றி ட்விட்டரில் புகழந்த பிரதமர் மோடி…

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘statue of unity’ இடமானது Times பத்திரிகையின் ’உலகின் 100 சிறந்த இடங்கள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை சிறந்த செய்தி என குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலகின் மிக உயரமான சிலையாக குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை கருதப்படுகிறது.கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்த சிலை திறக்கப்பட்டது.இதன் உயரம் 600 அடியாகும் .3000 கோடி மதிப்பில் உருவான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்த சிலைக்கு ‘statue of unity’ என்ற பெயரையும் சூட்டினர்.

தற்போது பிரதமர் மோடி ‘statue of unity’ சிலையை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த சிலை ’உலகின் 100 சிறந்த இடங்கள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை சிறந்த செய்தி எனவும்,இந்த இடம் பிரபலமான சுற்றுத்தளமாக மாறி வருவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் 34,000 பேர் ஒரே நாளில் வல்லபாய் சிலையை பார்வையிட வந்துள்ளனர் என்பதையும் பதிவிட்டுள்ளார்.

அதே போல், மும்பையில் இருக்கும் சோஹோ ஹவுஸ் என்ற இடமும் ’உலகின் 100 சிறந்த இடங்கள்’ பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version