குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி

17வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். டெல்லியில் உள்ள வெங்கைய்யா நாயுடுவின் இல்லத்துக்கு சென்ற மோடிக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள அமோக வெற்றி குறித்து குடியரசு துணைத் தலைவரிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

Exit mobile version