விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது திமுக – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, மக்கள் விரோத செயல்கள் உள்ளிட்டவற்றில் விடியா திமுக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை கே.கே. நகர் பூங்கா அருகே வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள எழுச்சி மாநாட்டை முன்னிட்டு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். பின்னர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.சரவணன், எஸ்.எஸ்.சரவணன், கே. தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, மக்கள் விரோத செயல்கள் மற்றும் பொய் சொல்வதில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது என விமர்சித்தார்.மேலும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என பொய்யான தேர்தல் வாக்குறுதி அளித்த விடியா அரசு, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகும் நிலையிலும், இதுவரை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் ஒரு கோடியே 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

YouTube video player

Exit mobile version