சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் குமாரராஜா முத்தையா பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அடையாறில் ராஜா முத்தையா செட்டியார் அறக்கட்டளைக்கு சொந்தமான 127 கிரவுண்ட் நிலம், குமாரராஜா முத்தையா பள்ளிக்கு குத்தகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் புதிய கட்டடங்களை கட்ட தடை விதிக்கக்கோரி ராஜா முத்தையா செட்டியார் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குத்தகை நிலம் தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், புதிய கட்டடம் கட்டினால் சிக்கல் ஏற்படும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி புதிய கட்டடம் கட்ட தடை விதித்தார். இதையடுத்து விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.