நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரை

2014க்கு பிறகு புதிய இந்தியாவை படைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று துவங்கியது. இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து மரபுப்படி படை வீரர்களின் அணிவகுப்புடன் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் சென்றார்.

இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். நாட்டின் முக்கியமான ஆண்டு இது என்று தெரிவித்தார். ஊழல் மற்றும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத அரசை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்பேத்கர் மற்றும் காந்திஜியின் கொள்கைகளை மத்திய அரசு கடைபிடித்து வருவதாக தெரிவித்த அவர், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் எளியவர்களையும் சென்றடைவதாக கூறினார். நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை திருக்குறளை தமிழில் மேற்கொள்காட்டி குறிப்பிட்டார்.

பிரதமரின் பல்வேறு காப்பீட்டு திட்டங்களால் நாடு முழுவதும் 21 கோடி பேர் பயனடைந்து உள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டின் பல பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டை வேரறுக்க உறுதிபூண்டு மத்திய அரசு தொடர்ந்து செயல்புரிந்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

Exit mobile version