16வது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் உத்தரவு

16வது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது 16வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் மோடி சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும், அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களையும் சமர்ப்பித்தார். இந்தநிலையில், அமைச்சரவை பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 16வது மக்களவையை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version