பிறநாட்டு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை: நாடாளுமன்ற மூலம் தீர்வு காணப்படும் – டிரம்ப்

அமெரிக்காவில் பிறக்கும் பிற நாட்டு தம்பதியரின் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கும் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறி வருகின்றனர். அங்கு தம்பதியராக வாழும் பிற நாட்டினருக்கு குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் வகையில் சட்டம் உள்ளது.

குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், குடியுரிமை விவகாரத்தில் அரசியல் சட்டத்திருத்தம் தேவையில்லை என்றும், நாடாளுமன்றத்தில் எளிமையான வாக்கெடுப்பு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Exit mobile version