மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களின் கூட்டத்தில், பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, மோடி தலைமையில் ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மீண்டும் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து, வரும் 30 ஆம் தேதி மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.