நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி முதல், பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மின்சார திருட்டு, மின் கட்டண பில்களில் குளறுபடி உள்ளிட்ட புகார்கள் மற்றும் குறைபாடுகளை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, முன்பே பணம் செலுத்தி, பயன்படுத்தும் வகையிலான, பிரீபெய்டு மின் கட்டண மீட்டரை நாடு முழுவதும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், 2019 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மீட்டர் எனப்படும் இதில், மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது போல், மின் கட்டணத்தையும், ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தால், மின் வினியோக நிறுவனங்களுக்கு, முன்கூட்டியே பணம் கிடைப்பதால், அவற்றுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.