திண்டுக்கல் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி மின்சார வசதிகள் செய்து தரப்படும் என்றும் சின்னாளப்பட்டியின் குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், இலையுடன் பூவும், கனியும் சேர்ந்து வெற்றி முரசு கொட்டும் கூட்டணி அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி என்று பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post