பெண்கள் தங்களது கர்ப்பத்தை தெரிந்து கொள்ள, இதுவரைக்கும் சிறுநீர் மூலமாதான் பரிசோதனை செய்தார்கள் ஆனால் இப்போது உலகிலேயே முதன்முறையாக உமிழ்நீரைக் கொண்டு கர்ப்பத்தை சோதனை செய்யும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள். அதுதான் சாலிஸ்டிக் கருவி. இந்த கருவி மற்றும் இது எப்படி வேலை செய்யும்? வாங்க பார்க்கலாம்…
சாலிஸ்டிக் ((Salistick)) என்று சொல்லப்படும் இந்தச் சோதனைக் கருவியை, ஜெருசலேமைச் சேர்ந்த ஸ்டார்ட்- அப் நிறுவனமான சாலிக்னோஸ்டிக்ஸ் ((Salignostics)) உருவாக்கியுள்ளனர்
கோவிட் சோதனை கருவிகளைத் தயாரிக்க உதவிய அதே தொழில்நுட்பத்தைக்கொண்டு இந்தச் சோதனை கருவியை தயாரித்திருக்கின்றனர்.
இந்தத் தயாரிப்பு எங்கும், எந்த நேரத்திலும் எளிதில் சோதனை செய்ய முடியும் என்பதால், இதனை கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்த முன்வருவார்கள் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்கிறார்கள்.
கர்ப்பப் பரிசோதனை கிட்! பயன்படுத்துவது எப்படி?…
காய்ச்சல் வந்தால் எப்படி தெர்மாமீட்டரை வாயில் வைப்போமோ அதேபோலத்தான் வைக்க வேண்டும்.
ஒருவர் தான் கர்ப்பிணியா என்பதனை உறுதி செய்ய இந்த கிட்டில் இருக்கும் குச்சியின் நுனியின் மூலம் உமிழ்நீரை சேகரிக்க வேண்டும். பிறகு, அந்த உமிழ்நீரை பிளாஸ்டிக் டியூபில் மாற்ற வேண்டும்.
அப்போது 5 முதல் 10 நிமிடங்களில் கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் இருக்கிறதா என்பதை அந்தக் கருவி கண்டறியும். இதனை ஸ்பிட் டெஸ்ட் ((Spit test)) என்று அழைக்கிறார்கள்.
இந்த ஸ்பிட் டெஸ்ட் மூலம்15 நிமிடங்களுக்குள் கர்ப்ப பரிசோதனை குறித்த முடிவுகளை, எளிதாக அறிய முடியும்.
இந்தச் சோதனையானது ஹெச்.சி.ஜியைக் ((HCG)) கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்ட கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் ஆகும்.
இஸ்ரேலில் கர்ப்பிணி மற்றும் கர்ப்பிணி அல்லாத 300 க்கும் மேற்பட்ட பெண்களிடம் மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகே சாலிக்னோஸ்டிக்ஸ் தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
Discussion about this post