திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் காஞ்சி மடம் இணைந்து மழை வேண்டி திருமலையில் காரீரி இஸ்டி யாகத்தை தொடங்கியுள்ளனர். யாகத்திற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்த யாகம் வரும் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு திருமலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஷ்வர சாமி கோயிலில் வருண ஜபமும், அமிர்தவர்ஷினி ராக ஆலாபனையும் நடைபெற்று வருகிறது.
Discussion about this post