மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் காலங்களில் 16 வயது சிறுமிக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். அனைத்து வயதியினரும் மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது என அறிவுறுத்திய பிரதாப் ரெட்டி, எதிர்காலத்தில் மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களால் அதிகளவில் இறப்புகள் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளித்ததாகவும், இதுதொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால் வேறு ஏதும் கூற முடியாது என மறுத்துவிட்டார்.