குழந்தைக்கு புரட்சித்தலைவி பெயர் சூட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!

திண்டுக்கலில் பிரசாரம் மேற்கொண்ட வனத்துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தொண்டரின் குழந்தைக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பெயரை சூட்டினார்.

நந்தர்ஷா தெரு, வேடபட்டி சோலை ஹால் திரையரங்கம், பாதாள காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், ராஜலட்சுமி நகரை சேர்ந்த அதிமுக தொண்டரின் பெண் குழந்தைக்கு மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரை சூட்டினார்.

Exit mobile version