கோவையில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, பிராங்க் வீடியோ எடுப்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பிராங்க் வீடியோ எடுத்தல் என்ற விதத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அதுபற்றிய புகார் வரப்பட்டாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படுவதுடன், அவரது யூடியூப் பக்கமும் முடக்கப்படும் என கோவை போலீசார் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post