துருக்கி- சிரியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதையடுத்து இரண்டாவது முறையாக 7.6 ரிக்டர் அளவிலும், மூன்றாவதாக ரிக்டர் அளவில் 6ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Discussion about this post