அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், உத்தரப்பிரதேசத் தலைமைச் செயலாளர், மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று சந்தித்துப் பேசுகிறார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இரண்டே முக்கால் ஏக்கர் பரப்பிலான நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கில் ராம் லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை சம பங்காகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூன்று தரப்புமே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், உத்தரப்பிரதேசத் தலைமைச் செயலாளர், மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோரை இன்று சந்தித்து அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளார்.
Discussion about this post