சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ காற்று விசுவதாலும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை, காஞ்சிபுரம்,விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான தரைகாற்று வீசும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.