நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.
இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள, சுமார் 150 மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவற்றிற்கு தடை விதிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நடந்த மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இருப்பினும் மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகே, மத்திய அரசு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது.
Discussion about this post