தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வரும் அனல் காற்றின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனத்தால் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்து வந்தது. இதனிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் நெல்லை உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை சில நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version