சிறுத்தையை விரட்டியடித்த முள்ளம்பன்றிகளின் தாய்மை உணர்வு!

மனிதர்களின் தலையாயப் பண்புகளில் தாய்மையை உதாரணமாகச் சொல்லலாம். இது மனிதர்களுக்கு மட்டும்தான் உண்டா என்றால் அப்படியில்லை. தாய்மை உணர்வு என்பது பலதரப்பட்ட உயிரினங்களுக்கும் உண்டு. குறிப்பாக, நம்மைப் போலவே அதிக அளவில் தன் பிள்ளைகள் மீது அன்பு செலுத்துபவை ஐந்து அறிவு உடைய விலங்கினங்கள் ஆகும். ஒவ்வொரு விலங்கிற்கும் தன் உதிரத்தில் இருந்து பிறந்து வந்த குழந்தையின் மீது அளவு கடந்த அன்பிற்கும் அதற்கு இந்த காட்சி உதாரணம்.

மதிப்பிற்குரிய சுப்ரியா சாஹு இ.ஆ.ப அவர்கள் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்த ஒரு காணொளி தாய்மை உணர்விற்கு ஒரு உதாரணமாகும். அக்காணொளியில் குட்டி முள்ளம்பன்றியை வேட்டையாட வரும் சிறுத்தையினை தடுத்து நிறுத்த இரண்டு முள்ளம்பன்றி பெற்றோர்கள் மெனக்கெடுகின்றன. சிறுத்தை பலவாறு முயற்சி செய்தும் குட்டியை கைப்பற்ற முடியாமல் முள்ளம்பன்றிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பின்வாங்கியது. இது குறித்த காணொளியின் சுட்டிக் கீழேத் தரப்பட்டுள்ளது.

Exit mobile version