சென்னையில் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிய வல்லரசு என்ற ரவுடியை என்கவுண்டர் செய்து போலீசார் சுட்டுக் கொன்றனர்.
வியாசார்பாடியை சேர்ந்த வல்லரசு என்ற ரவுடி பல்வேறு கொலை மற்றும் கொள்ளைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவரை கைது செய்ய காவல்துறையின் தனிப்படை போலீசார் சென்றனர். வியாசார்பாடியில் போலீசார் அவரை சுற்றி வளைத்தபோது, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பவுன்ராஜ் மற்றும் பிரேம் ஆகியோரை வெட்டிவிட்டு வல்லரசு தப்பியோடினார். தாக்குதலில் படுகாயமடைந்த பவுன்ராஜ் மற்றும் பிரேம் ஆகியோர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தையடுத்து, தொடர்ந்து இரவு முழுவதும் வல்லரசுவை போலீசார் தேடி வந்தனர். அப்போது மாதவரம் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த வல்லரசுவை சுற்றிவளைத்த போலீசார், அவரை சுட்டு வீழ்த்தினர். அவருடன் இருந்த மற்றொரு ரவுடி கதிர் என்பவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.