கடலூரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள், கூட்டாளிகளுடன் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, இரண்டு பைனான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ரவுடிகள் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக, கடலூர் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிதம்பரம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி அருகே இளைஞர் ஒருவரிடம் பிரபல ரவுடி சுரேந்தர் மற்றும் அவரது கூட்டாளி சுபாஷ் ஆகிய இருவரும் கத்தியை காட்டி, வழிப்பறியில் ஈடுபட்டு சென்றனர். இதுபோல் மற்றொரு ரவுடியான முக்கூட்டு முருகன் தனது கூட்டாளி ஆனந்தனுடன், அண்ணாமலைநகர் ராஜேந்திரன் சிலை அருகில் நடந்து சென்ற இளைஞரிடம் கத்தியை காட்டி ரூபாய் 6 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துச் சென்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் அண்ணாமலைநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரவுடிகள் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

Exit mobile version