பொன்முடிக்கு கிடுக்குப்பிடி! VOLUNTEER – ஆக வந்து ஆப்பு வைத்த உயர்நீதிமன்றம்!

திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படி திமுகவின் ஒவ்வொரு வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை லாக் செய்து மொத்தமாக ஊழலை வெளிகொண்டுவந்துவிட்டது. இன்னும் பாக்கி இருக்கும் அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், சிவசங்கர் என்று ஒரு பட்டாளமே வரிசைக் கட்டி இருக்கிறது. தற்போது மீண்டும் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கினை தானாக முன்வந்து கையில் எடுத்திருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது. தப்பிவிட்டோம் என்று நினைத்த பொன்முடிக்கு தற்போது மிகப்பெரிய ஆப்பு வைத்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு தான் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துள்ளேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறை, பொன்முடிக்கு நீதிபதி உத்தரவு இட்டுள்ளார். வழக்கை தாமாக முன்வந்து எடுத்தது ஏன் என்பது குறித்து 17 பக்க உத்தரவில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version