முதல்வர் போல உளறும் பொன்முடி! பாத்துதான படிக்கிறீங்க பின்ன என்ன? என கிழிக்கும் நெட்டிசன்கள்!

நேராவா-நேத்ராவா, சைதாப்பேட்டையா- சகாதேவ வாத்தியார் தெருவா அவரும் குழம்பி அனைவரையும் குழப்பிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்நிலைத் துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை இன்றுவெளியிட்டார். அப்போது தரவரிசை பட்டியளை வெளியிடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களின் பெயர்களை அறிவித்தார்.

தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவியின் பெயரை நேரா என கூறினார். பெயரை மீண்டும் தெரிவிக்குமாறு செய்தியாளர்கள் கேட்கும் போது மீண்டும் மீண்டும் நேரா என்றார். பின்னர் அருகில் இருந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், நேத்ரா என தெரிவிக்க பின்னர் நேத்ரா என்றார்.

அதேபோல அரசு பள்ளிகளில் படித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளின் பெயர்களை வாசிக்கும் போது மகாலட்சுமி என்ற தர்மபுரியை சேர்ந்த மாணவியை, மகாலட்சுமி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எனக் கூறினார்.
ஆனால் சகாதேவ வாத்தியார் தெரு என்பதை சைதாப்பேட்டை என உயர் கல்வித் துறை அமைச்சர் மாற்றி கூறியுள்ளார்.

நேத்ராவை, நேரா எனவும் சகாதேவ வாத்தியார் தெருவை சைதாப்பேட்டை எனவும் அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் மாற்றி மாற்றி பேசும் போது அங்கு இருந்தவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும் நிருபர்கள் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி சரியாக பதில் கூறவில்லை.

Exit mobile version