உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 10 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் பரிசு வழங்கக் கூடாது எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் நடக்க கூடிய ஊராட்சி பகுதிகளுக்குப் பரிசு வழங்கத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தெரிவித்தார். மேலும், தேர்தல் நடக்கக் கூடிய 27 மாவட்டங்களில், பொங்கல் பரிசு வழங்கப்பட மாட்டாது எனத் தமிழக அரசு உறுதியளித்தது. தேர்தல் நடக்காத 10 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும், மற்ற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
Discussion about this post