பொங்கல் பண்டிக்கையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தை அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளில் தொடங்கி வைத்த நிலையில், ‘பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க நியாயவிலைக் கடைகள் முன்பு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post