2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு 2வது நாளிலும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததால், கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் பயணச்சீட்டுகள் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பயணச்சீட்டுகள் விற்று தீர்ந்தது. இதனையடுத்து, ஜனவரி 11ம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பயணச்சீட்டுகள் விற்று தீர்ந்ததால் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையோட்டி அதிக விடுமுறை நாட்கள் வருவதால் சொந்த ஊருக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் எனவே அனைவருக்கும் பயணங்களை உறுதி செய்ய கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 13ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர்15ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு செபடம்பர்.16ம் தேதி தொடங்கவுள்ளது.
சொந்த ஊரில் இருந்து திரும்பும் போது, ஜனவரி 17ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர்19ம் தேதியும், ஜனவரி 18ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 20ம் தேதியும், ஜனவரி 19ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ம் தேதியும் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது.
Discussion about this post