அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும்,துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமது இல்லத்தில், ஆண்டுதோறும் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று காலை பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சரின் துணைவியார் விஜயலட்சுமி, மகன் ஜெயபிரதீப், மற்றும் மருமகள், பேரன், பேத்திகள்,உறவினர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரிய உடையணிந்து விழாவில் கலந்துக்கொண்டனர்.
Discussion about this post