கரூரில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில்,சேவல்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவிற்குட்பட்ட பூலம் வலசு மற்றும் கோவிலூரில், கடந்த சில வருடங்களாக சேவல் சண்டை நடைபெறாத நிலையில், கடந்த 2 வருடமாக நீதிமன்றத்தின் பல்வேறு நிபந்தனைகள் விதித்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள சேவல் சண்டைக்கு கலந்து கொள்வதற்காக, சண்டை கோழிகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடி 18 உள்ளிட்ட விழா காலங்களில் சேவல் சண்டை போட்டி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நிலையில், வரும் ஜனவரி, 14ம் தேதி துவங்கி, 4 நாட்கள் முதல் 5 நாள் வரை சேவல்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
Discussion about this post