பொங்கலை முன்னிட்டு சென்னையில் களைகட்டும் வேட்டி விற்பனை

பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய உடையான வேட்டி விற்பனை சென்னையில் களை கட்டியுள்ளது.

ஜனவரி 1 தேதி முதல் ஜனவரி 7 தேதி வரை தமிழ்நாட்டில் வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கூடுதல் சலுகைகளுடன் வேட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வேட்டி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரம்பரிய உடையான வேட்டி மீண்டும் புத்துயிர் பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version