திண்டுக்கல்லில் பருவ மழையால் நீர்நிலைகள் நிரம்பியது

திண்டுக்கல் சுற்று வட்டார கிராமங்களில் பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், சின்ன அண்ணன் மற்றும் பெரிய அண்ணன் கோயில் பகுதிகளில் இருந்து நீர்வெளியேற்றம் அதிகரித்துள்ளது. இதனால் சித்தையன்கோட்டையில் உள்ள அழகர்நாயக்கன் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் குளம் நிரம்பி மறுகால் வழியாக நீர் வெளியேறி வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வரத்து வாய்க்காலில் தண்ணீர் வருவதால் விவசாயம் செழிக்கும் எனக் கூறும் விவசாயிகள் கால்நடைகளுக்கு தேவையான நீரும் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

Exit mobile version