இப்ப வீட்டுக்கு போங்க! ஆனா சாயந்தரம் நாலு மணிக்கு திரும்பவும் வரணும்! கலக்கத்தில் பொன்முடி! கலக்கும் அமலாக்கத்துறை!

அமலாக்கத்துறை ரெய்டினால் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலக்கத்தில் உள்ளார். அவர் மட்டுமா கலக்கத்தில் உள்ளார் என்றால், மொத்த திமுகவினருமே கலக்கத்தில் உள்ளனர்.  மேலும் நேற்று இரவு விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்ட பொன்முடி மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை நான்கு மணிக்கு மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் பொன்முடிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அச்சத்தில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் பொன்முடி.

அமலாக்கத் துறையை நம்ப முடியாது நீதிமன்றத்தை நாட தயாராக இருங்கள் என வழக்கறிஞர்களிடம் தன் அச்சத்தையும் பொன்முடி வெளிப்படுத்தியிருப்பதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ள செந்தில் பாலாஜியின் மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோவையே பொன்முடி தற்போது நாடியுள்ளார்.

 

உயிர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார்.. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் தன் மகன் கௌதம சிகாமணிக்கு சட்டத்திற்கு புறம்பாக செம்மண் அல்ல அனுமதி வழங்கியது தொடர்பாக வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் 13 மணி நேரம் பொன்முடியில் சைதாப்பேட்டை வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் நகை மதிப்பீட்டாளர்களை வரவழைத்து வீட்டில் உள்ள தங்கம் வெள்ளி வைரம் உள்ளிட்டவைகளை மதிப்பீடு செய்துள்ளனர்; பிறகு நேற்று இரவு அம்பலக்குதுறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஏழு மணி நேரம் பொன்முடியிடம் விசாரணை நடத்தினார்கள்.

பல கேள்விகளுக்கு பொன்முடி முறையாக பதில் அளிக்காமல் இரவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரியில் முன்னிலையில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் வழங்கி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரும் என்ஆர் இளங்கோ, பொன்முடி வீட்டிற்கு நேரில் வந்து இன்று மாலை அமலாக்கத்துறை எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று இரண்டு மணி நேரம் பயிற்சி கொடுத்தார். மேலும், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி ஆஜராக கூறுவதால் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன் ஜாமின் வாங்கலாமா அல்லது கைது செய்த பிறகு நீதிமன்றத்தை நாடலாமா எதற்கும் தயாராக இருங்கள் என பொன்முடி என் ஆர் இளங்கோவிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் இறங்கி விடுமோ என்ற அச்சத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளார் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Exit mobile version