பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மகேந்திரன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால், தமிழகமெங்கும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மகேந்திரன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் இருந்தனர்.
முன்னதாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நாடாளுமன்ற வேட்பாளர் மகேந்திரனுடன் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post