பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு மீதான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்று ஐஜி. ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post