திருச்சி அருகே நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவத்தின் போது, இரவு ரோந்து பணிக்கு செல்லாத காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள தேசிய வங்கில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது, வங்கியின் சுவரில் துளையிட்டு லாக்கர்களில் இருந்த சுமார் 500 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து, வங்கி அலுவலர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வங்கியின் பின்பக்க சுவரில் கேஸ் சிலிண்டர், வெல்டிங் மிஷின் கொண்டு துளையிட்டு உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 60 போலீசார் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே வங்கி கொள்ளை சம்பவம் அரங்கேறிய போது, இரவு ரோந்து பணிக்கு காவலர் செல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து, கொள்ளை சம்பவத்தின் போது காவலர் பணியில் இருந்த சகாயராஜை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post