நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தையால் பேசி துன்புறுத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கை குழந்தையுடன் தம்பதியினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வீரன் சுந்தரலிங்க நகரில் சட்டவிரோதமாக சரல் அள்ளுவதுடன், முறையாக கல்குவாரிகள் செயல்படவில்லை என சமூக ஆர்வலர் முத்துச்செல்வன் போலீசில் புகார் அளித்திருந்தார்.
Discussion about this post