அரியலூரில், மாவட்ட காவல்துறை சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் அருகே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சாலை விதிகளை மதித்து, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு மரக்கன்றுகள், ரோஜா மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு, காவல்துறையினர் இலவசமாக ஹெல்மெட் வழங்கினர். அவர்களிடம், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விளக்கமளித்தனர். காவல்துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.