கரூர் மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றுக் கூறி, குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்த வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோரை, அதே ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் ரவுடிகளுடன் சேர்ந்து வெட்டிக் கொன்றார். அதே பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியதற்காக வீரமலை கொல்லப்பட்டது தெரியவந்தது. இரட்டை கொலை தொடர்பாக போலீசாரால் தேடப்படும் கூலிப்படைத் தலைவன் ஜெயகாந்தன் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைய சென்றார். ஆனால் அசல் சான்றிதழ் இல்லை என நீதிமன்ற ஊழியர்கள் கூறியதால் அவர் சென்று விட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றுக் கூறி குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரை பணி இடைநீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.